திருவாரூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெருமங்கலத்தில் தென்திசை நோக்கி யோக நரசிம்மராய் அருள்பாளிக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த ஆலயத்தில் நரசிம்மர் ஜெயந்தியை ஒட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது..
இதையொட்டி நேற்று சிறப்பு முதல் கால யாக பூஜை துவங்கி இன்று இரண்டாம் கால யாக பூஜை நடைப்பெற்றது.
தொடர்ந்து நரசிம்மருக்கு திரவியம்,மஞ்சள்,501 லிட்டர் பால் ,தயிர்,பஞ்சாமிர்தம்,சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. பல்வேறு திரவியபொருட்கள் ,பழங்கள்,சமர்பிக்கப்பட்டு் இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை நடைப்பெற்றது,,
பின்னர் மல்லாரி இசையுடன் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடத்தை பட்டாச்சாரியார் எடுத்து ஆலயவலம. வந்து யோகநரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து யோக நரசிம்மருக்கு முத்தங்கி்சாத்தி சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர். நகர் பகுதி உள்ளது. இந்த வழித்தடத்தில் பூமிக்கு அடியில் குழாய் முலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஆர்.ஆர். நகர் பகுதியில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் தேங்கி நிற்கிறது. இவ்வாறு குடிநீர் வெளியேறி வீணாவதால் அந்த பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் கூடும் பொதுமக்கள் அஞ்சுகின்றனர் .
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொது மக்கள் தகவல் தெரிவித்தும் ,இதுவரை குடிநீர் வீணாகுவதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கவனித்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















