பட்டுக்கோட்டை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் தனியார் தொலைக்காட்சி (தமிழன் டிவி) ஒன்றில் செய்தியாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் செல்வகுமார் தனது மனைவி செல்வராணியுடன் பைக்கில் பட்டுக்கோட்டை சென்று விட்டு மீண்டும் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே வந்து கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக வந்து அவர்களின் பைக்கின் மீது மோதியது. அதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த இருவருக்கும் கை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருவந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது.




















