மீஞ்சூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
வட காஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கியது வைகாசி திருத்தேரோட்ட திருவிழா.
திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் கொடியேற்று விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடி மரத்தில் கொடியானது ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சூரிய பிரபை சந்திர பிரபை என சிம்ம வாகனம் கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பகவான் காட்சியளிப்பார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக வருகிற 22 ஆம் தேதி கருடசேவை நிகழ்ச்சியும், 25 ஆம் தேதி பெருமாள் ஸ்ரீ தாயார் திருக்கல்யாண வைபவமும், 26 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது, கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.























