சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார்.
இந்நிலையில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு கோபூஜை வழிபாடு நடைப் பெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.