மயிலாடுதுறை, மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தினம் தோறும் கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்தனர்.

அதே போன்று கோடைக் கால பயிரான பருத்தி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வைகல் கிராம பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது தற்போது இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்கிறது. குறிப்பாக வைகல் சிவனார்கரம் கோனிராஜபுரம் கோடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

இக் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அதேபோன்று பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பருத்தி செடிகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இக் கன மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here