மயிலாடுதுறை, மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மண்ணை நனைத்துச் செல்லும் மழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மேகங்கள் சூழ்ந்து சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை நகரில் காவிரிக்கு வடக்கு புறம் சேந்தங்குடி பகுதியில் மட்டும் சுமார் பத்து நிமிடம் நல்ல மழை பெய்தது. அதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குளிர்ச்சியான சூழல் நிலவியது. சிறிய நகரமான மயிலாடுதுறையில் ஒரு பகுதியில் மட்டும் பெய்த மழை அப்பகுதிவாழ் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



















