காஞ்சிபுரம், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய 40 கிலோ மூட்டைக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பணம் கேட்கிறார்கள் என்று விவசாயிகள் பரவலாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்திரமேரூர் தாலுக்கா மருத்துவம்பாடி கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்த விவசாயிகளுக்கு பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்து உள்ளனர்.
அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் பாலாறு படுகை விவசாயிகள் சங்க தலைவர் மணி தலைமையில் காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை உடனடியாக வழங்க கோரியும், நெல் கொள்முதல் செய்வதற்கு விவசாயிகளிடம் பணம் பெறுவதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விற்பனை செய்த நெல்லுக்கான பணத்தை வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.
மேலும் விவசாயிகளின் அம் முற்றுகை போராட்டம் காரணமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி:-
பழையனூர் மணி,
பாலாறு படுகை விவசாயிகள் சங்க தலைவர்.



















