மயிலாடுதுறை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, மேல திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ உத்தரீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவ நிகழ்ச்சி இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு காவடி உற்சவமும் மறுநாள் காலை சுவாமி வேடம் புறப்படுதலும் சீராளன் புறப்பட்டு வீதியில காட்சியும், மகாதீப ஆராதனை மற்றும் அடியார்களுக்கு அமுத அளித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும் அக்கோயிலின் சிறப்பு என்பது குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு அடியார்களிடம் அமுது வாங்கி சாப்பிட்டால் குழந்தை பெரும் கிட்டும் என்பது இவ்வாலயத்தில் நிலவி வரும் ஐதீகமாகும்.
அது காலம்காலமாக தொண்டுத் தொட்டு பல தலைமுறையாக நடந்து வருகிறது. அதனால் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு தங்களால் இயன்ற நற்செயலை அவ்வாலயத்திற்கு செய்து வருகிறார்கள்.


















