கும்பகோணம், ஏப். 30 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில், அதிமுக சார்பில் கல்லூரி பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

கும்பகோணத்தில் லட்சுமி விலாஸ் மெயின் ரோட்டில் அதிமுக கல்லூரி பகுதி கட்சியினர் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா கல்லூரி பகுதி கழக துணைச் செயலாளர் பெருசு ராமமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது.

அதில் மாவட்ட செயலாளர் பாரதிமோகன், கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பேசுகையில் கோடை காலம் வாட்டி எடுத்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியே செல்ல சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.

கொதிக்கும் தார் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படும் பொது மக்களுக்கு சற்று கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்க மக்களின் தாகம் தணித்திடும் அறப்பணிகளில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில், மாநகரம் முழுவதும் தண்ணீர் பந்தல் மற்றும் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக தாராசுரம் கொட்டையூர் மற்றும் லட்சுமி விலாஸ் மெயின் ரோட்டில் உள்ளிட்ட 5 இடங்களில் பொது மக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரி, நுங்கு உள்ளிட்ட பழ வகைகளை வழங்கினார். தொடர்ந்து கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் தண்ணீர் பந்தல், மற்றும் நீர் மோர் பந்தல் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. என்று தெரிவித்தார்.

அந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம ராமநாதன், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ஏவிகே அசோக்குமார், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் அன்பு, வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலமுருகன், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மோகன்ராஜ், மீனவர் அணி பிரிவு பொறுப்பாளர் அன்பு, மாவட்ட பிரதிநிதி ரத்னா ராஜேந்திரன்,  தொழிலாளர் மத்திய சங்க செயலாளர் சக்திவேல், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ரகுபதி, மாணவர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், அம்மா பேரவை மாநகர செயலாளர் ஆயூப்கான், இணைச்செயலாளர் ஜான், மாமன்ற உறுப்பினர் ஆதிலட்சுமி ராமமூர்த்தி,மற்றும்  நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here