திருவள்ளூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளுவர் மாவட்டம், பணி நிறைவு பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியரிடம் படித்து காவல்துறையிலும், பல்வேறு துறைகளில் உயர்ந்த அதிகாரிகளாக பணியாற்றி வரும் மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஜான்சன். இவர் அதே பள்ளியில் முன்னதாக உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற வரும் தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற இவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
மேலும் 38 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக சிறப்பான முறையில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஜான்சன் மாணவர்களின் அறிவு பசியை போக்கி மாணவர்களை நல் வழிபடுத்தி அரசு அதிகாரிகளாகவும் காவல்துறை அதிகாரிகளாகவும், வழக்கறிஞர், தொழிலதிபர் போன்ற முக்கிய பொறுப்புகளில் ஏராளமானவர்களை உருவாக்கியுள்ளார். இவர் சக ஆசிரியர்களுடன் நல்ல முறையில் நட்பு பாராட்டி பள்ளியை மேம்படுத்த பெருமளவு முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக உயர்த்த பல்வேறு கல்வி சம்பந்தமான முன்னேற்றங்களில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர், மேலும் அவருடைய சொந்த செலவில் பள்ளிகளுக்கு கல்வி சம்பந்தமான உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியும்
நல்லதொரு முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழாவானது தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் விழா போல் கோலகாலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி பங்கேற்று தலைமை ஆசிரியர் ஜான்சன் 38 ஆண்டுகளில் மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் நல்ல முறையில் பணியாற்றியதை எடுத்துரைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் அதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஜான்சரிடம் கல்வி கற்று தற்போது காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளாக பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றது விழாவிற்கு வந்தவர்களை நிகழ்ச்சிகள் ஆழ்த்தியது.
இவ்விழாவில் திருவள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சால்வை மற்றும் மாலை அணிவித்தும் கேக் வெட்டியும் பரிசு பொருட்கள் வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.




















