தஞ்சாவூர், ஏப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..

மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்யவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவற்றின் இனப்பெருக்கத்தால் நாளுக்கு நாள் அதன் தொந்தரவு மேலோங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இருந்து உணவுப் பொருட்களையும், மார்கெட் சென்று வரும் பெண்களிடம் இருந்து அவர்கள் வாங்கிவரும் பழம் மற்றும் காய்கறி பொருட்களை அவைகள் பறித்து செல்வதாகவும், மேலும் வீட்டில் சமைத்து வைத்திருக்கும் உணவுப் பொருட்களை ஜன்னல் மற்றும் இதர வழிப்பாதைகள் வழியே வீட்டிற்குள் நுழைந்து அவற்று உண்டு செல்வதாகவும் அம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அக் குரங்குகள் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நடந்து செல்பவர்களை அச்சுறுத்துவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய் மற்றும் மாடுகளுக்கிடையே தற்போது அக்குரங்களோடும் தங்கள் உயிர்களையும் உடல்களையும் பாதுகாத்துக் கொள்ள தினசரி போராடி வர வேண்டிய நிலையில் வாழ்ந்து வருவதாக கற்றம் சாட்டுகின்றனர்.

அதனால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறுவதற்கு முன்பு அச்சுறுத்தும் குரங்குகளை, வனத்துறையினர் பிடித்து செல்ல அவைகளை பாதுகாப்பாக கொண்டு சென்று வனப்பகுதிகளில் விடும்படி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்..

தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே மேலவழுத்தூர் ஹாஜியார் தெரு சுற்றியுள்ள, குடியிருப்பு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளின் உள்ளே ஏராளமான குரங்குகள் புகுந்து சமைத்து வைத்த பொருட்களை தின்று  விடுவதாகவும், தென்னை மரங்களில் தனது குட்டிகளோடு தாவி குதிக்கும் குரங்குகள் முற்றாத தேங்காய்களை பறித்து தண்ணீரை குடித்து விட்டு கண்ட இடங்களில் தூக்கி வீசுவதாகவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு அச்சமான சூழ்நிலை நிலவி வருவதாக தெரிவிக்கும் அவர்கள் அதுத் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here