திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் மாறன்…
திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது ஜடா முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பால முனிஸ்வரர் ஆலயம். மேலும் அவ்வாலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ஆடு கோழி ஆகியவற்றை பலி கொடுத்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளுர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பால முனீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமியை யொட்டி திருவிழாவானது அப்பா. அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது.
திருவிழாவில் திருப்பாச்சூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.