தஞ்சாவூர், ஏப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஸ்ரீகோதண்டராமர் பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் – வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையில், பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த 17ம் தேதி ஏகாந்த சேவையுடன் துவங்கியது

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. முன்னதாக பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். சீதா சமேத ராமர் மண பந்தலில் எழுந்தருளினர். மாலை மாற்றல் ஊஞ்சல் வைபோகத்துடன் கெட்டிமேளம் இசைக்க சீதா ராமர் திருக்கல்யாணம் நடைப்பெற்றது.

திருக்கல்யாணம் வைபோகம் முடிந்ததும் திருமணம் தடை நீங்க வேண்டிக் கொண்டவர்களுக்கு சுவாமி மாலை பிரசாதமாக வழங்கப்பட்டது. இத்திருக்கல்யாண வைபோக நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here