மயிலாடுதுறை, ஏப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை  வரதாச்சாரியார் தெருவில் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை செய்தனர்.மேலும் ஆண்கள் பெண்கள் தங்களது வாயில் 12 அடி முதல் 33 அடி வரை அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் பம்பை இசை வாசிப்புக்கேற்ப ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்தில் நடனமாடியது அவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை டவுன் வரதாச்சாரியார் தெருவில் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயத்தில் 35 ஆம் ஆண்டாக கரக உற்சவ திமிதி திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் அம்மனுக்கு உகந்த மஞ்சள் நிற உடை உடுத்தி பால் குடத்தை தலையில் சுமந்து காவிரி கரையில் இருந்து பம்பை மேல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயம் வந்தடைந்தனர்.

மேலும் அதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் என திரளானவர்கள் பங்கேற்று தங்களது வாயில் 12அடி முதல்33 அடி அளவு நீள அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

ஆலய வாசலில் பால்குடத்தை வரவேற்று பம்பை இசைக்கு ஏற்ப பெண்கள் பக்தி பரவசத்தில் நடனமாடியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here