மயிலாடுதுறை, ஏப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பக்தி சந்தியா என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம்நபேடா  என்ற பாடகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் அப்பகுதி வாழ் ஜெயின் சமூகத்தினர் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். ஜெயின் சமூகத்தின் 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீர் ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர மாதம் திரயோதசி திதியன்று ஜெயின் சமூகத்தினரால் கடைபிடிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு நேற்று பிற்பகல் மயிலாடுதுறை சுமதி நாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இரவு பக்தி சந்தியா எனப்படும் ஆன்மீக இன்னிசை கச்சேரி மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் பிரபல பக்தி சந்தியா பாடகரான ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம் நபேடா என்பவர் குழுவினருடன் இணைந்து இன்னிசை ஆலாபனைகளால் தீர்த்தங்கரர் புகழ் பாடினார். அவரது கச்சேரியில் பங்கேற்ற ஜெயின் சமூகத்தினர் அனைவரும் எழுந்து நின்று பக்தி பரவசத்துடன் ஆடி பாடி வழிபாடு செய்து உளம் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here