புதுச்சேரி, ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலின் சித்திரை பிரமோத்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து திருத்தேரினை இழுத்தனர்.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட நவீனா கார்டன் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். மேலும் அத்திருக்கோவிலின் சித்திரை பிரமோத்சவ விழா 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு ஹோமங்களுடன் திருமஞ்சனம் நடைபெற்றது, சூர்ய பிரபை, சந்திர பிரபை, சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்று வந்தது. மேலும் அத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
அத்திருத்தேரில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத நவநீதகிருஷ்ணன் தேரில் வைக்கப்பட்டு கோவிந்தா கோவிந்த என்றவாறு பக்தர்களின் பரவச முழக்கங்களுடன் அவர்கள் அத்திருத்தேரின் வடம்பிடித்து இழுத்தனர். மேலும் அத்திருதேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்து நடை சேர்ந்தது.





















