தஞ்சாவூர், ஏப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்க்கு  தேவையான மின்னனு இயந்திரங்கள் வாக்குசாவடிக்கு அனுப்பி வைக்கும் பணி  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,  மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் முன்னிலையில் தீவிரம்…

தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் மன்னார்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளது.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்கள் – 7,27,166. பெண்கள் – 7,73,932. மூன்றாம் பாலினம்- 128 கூடுதல்- 15,01,226. 1,710 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 92 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்த வாக்குச்சாவடி மையம் குலுக்கல் முறையில் ஆர்ஓ க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2,050 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள். 2,080 கட்டுபாட்டு இயந்திரங்கள். 2,221 ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள். தேர்தல் பணியில் 8,404 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அந்தந்த தாலுக்கா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்து செல்லும் பணிகள் தீவிரமாக  நடைபெறுகிறது.

திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மின்னுனு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தார்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here