ஊத்துக்கோட்டை, ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜே.கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் படி ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 04 மற்றும் 05 வார்டில் திமுக கழக நகர செயலாளர் அபிராமி குமரவேல் தலமையில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கிக் கூறியும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையினை மக்களிடம் எடுத்துரைத்தும், மேலும் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளரும் ஊத்துக்கோட்டை தேர்தல் பொருப்பாளருமான கதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். மேலும் இந்நிகழ்ச்சியினை 05வது வார்டு கவுன்சிலர் கோகுல் கிருஷ்ணன் சிறப்பாக ஏற்பாடு செய்தார். உடன் ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் துணைத்தலைவர் குமரவேல் மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் சம்சுதின் மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக் நகர துணை செயலாளர் பார்த்திபன் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பிராபாவதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் நரேஷ் வெங்கடேசன் சரவணன் கொய்யா தோப்பு கஜேந்திரன் மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.





















