பட்டுக்கோட்டை, ஏப். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தப்பித்தவறி பாஜக வெற்றி பெற்றால் இந்த நாட்டில் இனி தேர்தலே இருக்காது எனவும் மேலும் அதிபர் ஆட்சி கொண்டு வந்து நமக்கு கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் தடுக்கப்படும் எனவும், அடுத்த தலைமுறையும் அதனால் பாதிக்கப்படும் எனவும் நாம் செலுத்திய வரியை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கி விட்டு தமிழ்நாட்டிற்கு எந்த திட்டத்தையும் பாஜக அரசு செய்யாது என அப்போது தனது தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். அதனால் பாஜகவையும், அடிமைக் கூட்டம் அதிமுக இருவரையுமே டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என மேலும் அவர் பட்டுக்கோட்டை அருகே கிராமங்களில் இன்று இரவு நேரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் ஆவேச பரப்புரை நிகழ்த்தினார்.

இந்தியா கூட்டணி தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று இரவு பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பள்ளிகொண்டான் கிராமத்தில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வேட்பாளர் முரசொலிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு பேசினார் அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் கடந்த 33 மாத ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார். எனவும் அதில் குறிப்பாக பள்ளி கல்வித்துறைக்கு இந்த ஆண்டு 44 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளார். எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

தற்போதைய விலைவாசி உயர்வுக்கு காரணம் ஜிஎஸ்டி வரி. நாம் செலுத்துகிற வரியை ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கி விட்டு தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு திட்டமும் செயல் படுத்தவில்லை. எனதெரிவித்த அவர் தப்பித்தவறி பாஜக வெற்றி பெற்றால் இந்த நாட்டில் தேர்தலே இருக்காது. அதிபர் ஆட்சியை கொண்டு வந்து அதன் மூலம் சர்வாதிகாரத்தை பயன்படுத்தி நமக்கு கிடைக்கிற அனைத்து உரிமைகளும் தடுக்கப்படும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நம்மை நம்பி இருக்கிற அடுத்த தலைமுறையும் பாதிக்கப்படும். நாம் செலுத்தும் வரியை மட்டும் வாங்கி விட்டு நமக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாத பாஜக மற்றும் அடிமை கூட்டம் அதிமுக இருவரையுமே நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்க கேட்டு கொண்ட அவர் அதற்கு நமது வெற்றி வேட்பாளர் முரசொலிக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

அமைச்சருடன் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர். முன்னதாக பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் ஒட்டங்காடு, புனல்வாசல், பாதிரங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் முரசொலிக்கு உதயசூரியன் சின்னத்தில் அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரித்தார். அவருடன் பேராவூரணி எம்.எல்.ஏ.அசோக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here