தஞ்சாவூர், மார்ச். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், வின்னர் மல்டி மியுரல் அகாடமி தற்காப்பு கலை பன்னாட்டு பயிற்சி பள்ளி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் அறக்கட்டளை,  அருள்மொழி கலை இளையோர் மன்றம் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் சிலம்பம் அரங்கேற்றம் மற்றும் மாராயப் பட்டைகள் வழங்கும் விழா தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் தஞ்சாவூர் சிலம்ப சங்க செயலாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் நடைபெற்றது.

மேலும் அவ்விழாவில் சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம், ஸ்டார் லயன் கல்வி நிறுவன முதல்வர் மில்டன் ராஜ், ராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் மாராயப் பட்டைகளை வழங்கினர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாள்வீச்சு, ஒற்றைவாள், இரட்டைவாள், சுருள்வீச்சு, மான்கொம்பு, சக்கர பானம், ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, அலங்கார பாடம்,  குத்துவரிசை ஆகிய தற்காப்பு கலைகளை செய்து காட்டி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

மேலும் இந்நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என திரளானவர்கள் வருகைத் தந்து பங்கேற்றனர். அச்சிறப்பான  நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் பயிற்சியாளர் சங்கீதா வெகுச்சிறப்பாக செய்திருந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here