பொன்னேரி, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சரஸ்வதியை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். பொன்னேரிக்கு சென்று வீட்டிற்கு வந்த கணவர் குமார் பார்த்த போது மனைவி சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதனை கண்ட அவர் அதிர்ச்சிக்கு உள்ளாகி அருகில் உள்ளவர்களை அழைத்து விஷயத்தை எடுத்துக் கூறி 108 ஆம்புலன்சுக்கும்,பொன்னேரி காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.
108-ல் வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரஸ்வதியை பரிசோதனை செய்து ஏற்கனவே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல்துறையினர் அக்கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை உதவி கமிஷனர் சபாபதி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணையை தொடங்கினார்.






















