பொன்னேரி, மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள தச்சூர் கூட்டுச் சாலையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில், திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பொன். பாலகணபதி அறிமுக கூட்டம் நடைபெற்றது.
மேலும் கூட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் பி.வி. சங்கர் ராஜா தலைமையில் நடைபெற்றது, மாலை 6 மணி அளவில் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்த வேட்பாளர் பொன் பாலகணபதிக்கு அக் கட்சியின் நிர்வாகிகளின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நிர்வாகிகளின் மத்தியில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி மாவட்ட கழக செயலாளர் சங்கர்ராஜா சிறப்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அனைத்து பொறுப்பாளர்களும் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அப்பொழுது நிர்வாகிகளின் மத்தியில் பேசிய பிஜேபி வேட்பாளர் பொன் பாலகணபதி ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அதில் அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சார்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
























