பழவேற்காடு, மார்ச். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் கடல் அலை இழுத்துச் சென்றதில் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.

மணலி பகுதியில் வசித்து வரும் யோகேஸ் என்ற கல்லூரிமாணவன்  மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் இரண்டாம் ஆண்டு கல்விப்பயின்று வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது நண்பர்களுடன் பழவேற்காடு பகுதியில் உள்ள கடலில் குளிப்பதற்காக லைட் ஹவுஸ் கடற்கரைக்கு சென்று உள்ளார். அங்கு கடலில் குளிக்கும் போது ராட்சத கடல் அலை அவரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அதில் அவர் உயிருக்கு போராடியுள்ளார். அங்கிருந்தவர்கள் மீனவர்களின் உதவியுடன் யோகேஷை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

அங்கு யோகேசை பரிசோதித்த மருத்துவர்கள் யோகேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் அத்தகவலறிந்து அங்கு வந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கல்லூரி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் மற்ற மாணவர்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here