செம்மங்குடி, மார்ச். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்

திருவாரூர் மாவட்டம், செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா வெகுச் சிறப்பாக நடைபெற்ற. அவ்விழாவிற்கு தலைமையாசிரியர் T. V. ராமன் தலைமை தாங்கினார்.

மேலும் இக்கல்வியாண்டின் ஜூனியர் ரெட்கிராஸ் செயல்பாடுகளின் ஆண்டறிக்கையினை திருவாரூர் மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் பொருளாளரும், பள்ளியின் ஜே.ஆர்.சி ஆலோசகருமான R. சரவணக்குமார் வாசித்தார்.

மேலும் அச்சிறப்பு மிகு விழாவில் சிறப்பு விருந்தினராக திருவாரூர்  மாவட்ட ஜூனியர்  ரெட்கிராஸ் அமைப்பாளர் இரா. செந்தில்குமார் பங்கேற்றார். தொடர்ந்து அவர் போட்டியில் பரிசுப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று ஜே.ஆர்.சி ஆலோசகர் P. விவேகானந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். அந்நிகழ்வில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் D. ஸ்ரீவித்யா, பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் K. முருகதாஸ், உடற்கல்வி இயக்குநர் S. விஜய், இசை ஆசிரியை N.மீனாட்சி, உடற்கல்வி ஆசிரியர் K. வெங்கடேசன், வ.சோ. ஆண்கள் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஜே.ஆர்.சி ஆலோசகர் லெ.பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவின் நிறைவாக பள்ளி ஜே.ஆர்.சி ஆலோசகர் A. G. ஆனந்த் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் ஜே.ஆர்.சி அமைப்பு மற்றும் அலுவலக ஊழியர்கள் பாலாஜி, சதீஷ், வழியுரான், நேரு  ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here