திருவள்ளூர், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரவீன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்ட போது, காரில் எடுத்து வரப்பட்ட ரூ.17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவரது மகள் திருமணத்திற்காக நகை வாங்குவதற்காக சென்னைக்கு பணம் எடுத்துச் சென்றதும் தெரிய வந்த நிலையில் பணத்தை பறிமுதல் செய்து திருவள்ளூர் வட்டாட்சியரும் கூடுதல் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வாசுதேவன் அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அல்லது அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்தனர்.