பொன்னேரி, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது மெதூர் பாரதி நகர் கிராமம் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மற்றும்பழங்குடியின மக்கள் நல்வுறவுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதி திராவிட மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில் அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவை அரசு சார்பில் வழங்கிவுள்ளது. இருப்பினும் இதுநாள்வரை அப்பகுதியில் அம்மக்கள் குடியேற முடியவில்லை என கூறி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவளித்தனர்.
மெதூர் பாரதி நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1999 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில் வழங்கப்பட்டது.
பட்டா வழங்கிய நாள் முதல் இதுநாள் வரையில் 150 குடும்பங்களுக்கும் பட்டா அளந்து கொடுக்கப்படாமல் உள்ளதால் கிராம மக்களுக்கு இடையே தனி நபர் பிரச்சனைகளும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது எனவும், மேலும் அவ்விடத்தை 150 குடும்பங்களுக்கும் நிலத்தை அளவீடு செய்து பிரித்து கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் எனக் கூறி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாட்சியர் மதிவாணனிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். மேலும் அம்மனுவினைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் அதுக் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.























