திருவள்ளூர், மார்ச். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி

பொன்னேரியில். தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடு விவகாரத்தில் பாஜக அரசிற்கு துணை போகும் பாஜகவிற்கு துணை போகும், பாரத் ஸ்டேட் வங்கியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடில் ஈடுபடும் பாஜகவிற்கு அரசுக்கு துணைப் போகும் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஜனநாயகத்தின் குரல்வலையை நசுக்கும் நோக்கோடு நாடாளுமன்றத் தேர்தலில் தில்லுமுல்லு செய்வதற்காக மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக நடைபெற்றுள்ள தேர்தல் நன்கொடை பத்திர முறை கேட்டிற்கு ஆதரவாக பாரத் ஸ்டேட் வங்கி செயல்படுவதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் ஊர்வலமாக சென்று அப்பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் ஸ்டேட் வங்கியின் முன்பாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here