தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன் (32) என்பவர் அப்பகுதியில் கூலி தொழிலுக்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குணசேகரன் (42) பெயிண்டர் வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே இரு சக்கர வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதுப் போன்று நேற்றிரவு தர்ஷன் தனது டூ வீலரை, குணசேகரன் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த குணசேகரன் தனது வீட்டின் முன்பு டூ வீலர் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்ததும் ஆத்திரமடைந்துள்ளார்.
மேலும் அது தொடர்பாக தர்ஷனுக்கும், குணசேகரனுக்கும் இடையே முதலில் வாய்த்தகராறில் தொடங்கிய அத்தகராறு ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பானது. அதில் மேலும் ஆத்திரம் அடைந்த குணசேகரன் கத்தியால் தர்ஷனை சரமாரியாக குத்தியுள்ளார்.
அதில் படுகாயம் அடைந்த தர்ஷன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தர்ஷன் உயிரிழந்தார். அக்கொலைக் குறித்து தஞ்சாவூர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, குணசேகரனை கைது செய்தனர்.




















