தஞ்சாவூர், மார்ச். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சை மாவட்டம் திருவையாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடை ஒன்றில்  கேஸ் அடுப்பில் வடை போட்டு  கொண்டு இருந்த போது திடீரென கேஸ் வெளியேறி ரம்பர் டியூப்பில் தீ பற்றி எரிய தொடங்கியது. அப்போது கடை முன்பு டீ அருந்தி கொண்டு இருந்தவர்கள் பொது மக்கள் அலறி அடித்து ஓடினார்கள்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். மேலும் கேஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு சென்ற டியூப் வெகு காலமாக பயன்படுத்தப்பட்டு வந்ததால் அந்த டியூப்பில் ஏற்றபட்டிருந்த பாதிப்பின் காரணமாக அதில் இருந்து கேஸ் வெளியேறியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here