திருவாரூர், மார்ச். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்

திருவாரூரில் இன்று நடைப்பெற்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தனது 4 வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினைத் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 5 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 577 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் 870 முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடக்க நிகழ்வாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினரும் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தனர்.

மேலும் அந்நிகழ்வில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தனது 4 வயது குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் நகர மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here