திருவள்ளூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தஞ்சேரி பகுதியில் புதிதாக பூண்டி வடக்கு ஒன்றிய திமுக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.
அவ்விழாவில் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான் என்கிற பொன்னுசாமி முன்னிலையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிபூண்டி சட்ட மன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கும் பேருந்து ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினார்.
அதனை தொடர்ந்து திமுக செய்த சாதனைகளை விளக்கும் வகையிலான இல்லந்தோறும் ஒலிக்கும் ஸ்டாலினின் குரல் என்ற நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையாக திமுகவின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வழங்கினார்.
முன்னதாக அவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி(எ)அன்பரசு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், மாவட்ட பொருளாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், விவசாய அணி அமைப்பாளர் AK.சம்பத்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் ரவிக்குமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் வில்சன் நிலவழகன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆரம்பாக்கம் ஆறுமுகம், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சம்பத், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சுமன் வழக்கறிஞர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் முனுசாமி ஆகியோர் அவ்விழாவிற்கு முன்னிலை வகித்தனர்..
அச்சிறப்பு மிகு விழாவில் ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் ராகவன், பூண்டி ஒன்றிய துணைச் செயலாளர் வேல்முருகன், குருமூர்த்தி, ஸ்ரீதேவி, பாலாஜி, சீனிவாசுலு, நாகராஜ், ரகு, பேரூர் செயலாளர் அபிராமி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீபன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் கோல்டு மணி மாவட்ட பூண்டி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சித்ரா பாபு, பொருளாளர் சுரேஷ் உட்பட மாவட்ட ஒன்றிய உள்ளாட்சி பிரதிநிதிகள் என திரளானவர்கள் பங்கேற்று அவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.




















