கும்பகோணம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவில் அருகில் உள்ள அழகாபுத்தூர் ஸ்ரீ செய்ய விநாயகர் மற்றும் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 28ம் தேதி புதன்கிழமை முதல் கால யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று வந்தது.
மேலும் இன்று 4ம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து, விமான கலசங்களுக்கும், சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் லோகநாதன், செயலாளர் கிருஷ்ணன், உபதலைவர் சிவராஜ், நிர்வாகிகள் முருகேசன், தங்கராசு, சந்திரசேகர், தம்பிதுரை, கிராம நாட்டாண்மைகள் பேரின்பம், பலராமன், பாலகிருஷ்ணன், சரவணன், செந்தில்குமார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.