திருவள்ளூர், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், இன்று 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. அத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினார்கள். அதுப்போன்று புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 105 மையங்களில் 25882 மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார்கள். மேலும் இன்று தொடங்கிய இத் தேர்வு எதிர் வருகின்ற மார்ச் 22 ந் தேதி வரை நடைபெறுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 105 தேர்வுமையங்களில் 11992 மாணவர்களும் 13890 மாணவிகளும் ஆக மொத்தம் 25882 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
பார்வை குறைபாடுடைய பூவிருந்தவல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் 19 மாணவர்களும் அதுப் போன்று புழல் மத்திய சிறையில் 3 பெண் கைதிகள் 26 ஆண் கைதிகள் உட்பட 29 பேர் தேர்வு எழுதினார்கள். மேலும் அத்தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படை குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர்.





















