திருவள்ளூர், பிப். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..

திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் ஊராட்சி சம்பந்தமான சில தகவல்கள் கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது

ஆனால் மனுவினைப் பெற்றுக் கொண்ட அத்தகவல் அலுவலர் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அம்மனுதாரர். சட்டப்படி முதல் மேல்முறையீடு அதைத் தொடர்ந்து இரண்டாவது மேல்முறையீட்டை தகவல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் தகவல் ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு உரிய தகவல் வழங்கும் படி பொது தகவல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .

அதன் பின்னரும் தகவல் வழங்காததால் ஆணை நிறைவேற்றாமை மனுவினை மனுதாரர் (Non compliance petition) தகவல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்படி கடந்த 22-11-2023 அன்று வழக்கை விசாரணை செய்த மாண்புமிகு தகவல் ஆணையர், உரிய காலத்தில் தகவல் வழங்காத பொது தகவல் அலுவலருக்கு ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்து மேற்படி அபராதத் தொகையை வழக்கில் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு இழப்பீடாக வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குநர்/கூடுதல் ஆட்சியர் அவர்கள் 30 நாட்களுக்குள்  மனுவிற்கு தகவல் வழங்காத அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here