காஞ்சிபுரம், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் இன்று நடைப்பெற்றது. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அதனைத் தொடர்ந்து மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் பகுதிகளில் மனு அளிக்காமல் பணிகள் நடை பெறுவதாகவும் என் கவனத்திற்கு வராமல் தீர்மானம் வந்துள்ளதால் அதுக் குறித்து கேள்வி எழுப்பினார். அப்பொழுது ஆணையர் அவர்களுக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அதனால் மாமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் மகாலட்சுமி தலைமையில் இன்று அறிஞர் அண்ணா அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் செந்தில் முருகன், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அக்கூட்டத்தில் 82 தீர்மானங்கள் வைக்கப்பட்ட நிலையில் மூன்று தீர்மானங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு 79 தீர்மானங்கள் ஏக மனதாக மாமன்ற உறுப்பினர்களால் ஏற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். அதில் குறிப்பாக காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சத்தையும், மேலும் உயிர் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வரும் தெரு நாய்கள் மாடுகள் மாநகரின் பல இடங்களில் அதிகமாக சுற்றி வருகிறது.
அதனைக் கட்டுப் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகர் முழுவதும் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் கோரிக்கை வைத்தார்.
அக்கேள்விக்கு பதலளித்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இன்னும் ஒரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சுமார் 800 க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்காக முதல் கட்ட சிகிச்சை பெற்றது குறிப்பிடத் தக்கதாகும்.
28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் அவர் வார்டு பகுதிகளில் ஏற்கனவே பல பணிகள் கிடப்பில் போடப் பட்டுள்ளதாகவும் புதிய சாலை கேட்காமலே அப்பகுதியில் புதிய சாலை அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு அதில் நாம் ஒன்று உறுப்பினர் கேட்டதில் பெயரில் திட்டம் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே சாலைகள் பணிகள் புதியதாக அமைக்கப்பட வேண்டும் என கூறியும் இதுவரை அந்த பணிகள் மேற்கொள்ளவில்லை ஆனால் என் கவனத்திற்கு வராமல் இந்த பணியை எப்படி கொண்டு வரலாம் என வாக்குவாதம் ஏற்பட்டது அப்பொழுது ஆணையர் செந்தில் முருகன் மற்றும் திமுக மாவட்ட உறுப்பினர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் வகையில் ஆணையர் செயல்படுவதாக கூறி சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்போதும் மாமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.




















