காஞ்சிபுரம், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
சக்தி தலங்களில் ஒட்டியான பீட ஸ்தலமாக விளங்கும் முதன்மை ஸ்தலமான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
லட்சுமி சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தருகே எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்ககொடி மரத்தில் காமாட்சி அம்பாள் படம் பொறித்த கொடியை கோவில் ஸ்தானிகர்கள் கொடியேற்ற அவ்விழாவில் பங்கேற்ற திரளான பக்தர்கள் மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.
மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தங்க பல்லக்கு உற்சவம் வரும் 19 ஆம் தேதியும், ரத உற்சவம் 21 ஆம் தேதியும், வெள்ளிதேர் உற்சவம் 23 ஆம் தேதியும் நடைபெறுவது குறிப்பிடத் தக்கதாகும்.
மேலும் 26 ஆம் தேதி அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும். அதனை தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.






















