மீஞ்சூர், பிப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பாரெட்டிபாளையம் மற்றும் பள்ளிபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது,

அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் உள்ளிட்டவர்கள் ரூ.18, கோடி மதிப்பீட்டிலான உயர்மட்ட மேம்பாலம் பணிக்கு அடிக்கல்லை நாட்டினர்,

அவ்விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி, திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், காணியாம்பாக்கம் ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் சதா, துணைத் தலைவர் பூபாலன், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.எல்.ரமேஷ், ஒப்பந்ததாரர் விஜயகுமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் சிறப்புமிகுந்த அவ்விழாவில் மீஞ்சூர் பேரூர் கழக திமுக செயலாளர் தமிழ்உதயன், கொண்டக்கரை காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், மீஞ்சூர் ஒன்றிய காங்கிரஸ் வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக அவ்விழாவில் உரைநிகழ்த்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இப்பகுதியில் 20 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்த இந்த உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும்பணி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் காலத்தில் துவங்கியதற்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்து பேசினார்கள்.

மேலும் இதற்காக பாடுபட்ட அனைவரையும் நினைவுக் கூர்ந்து பாராட்டினர் இதில் திரளாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here