புதுச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாண்டிச்சேரி யூனியன் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். கணவரை பிரிந்து கடந்த 27 ஆண்டுகளாக தன் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகன்களின் திருமணத்திற்கு பிறகு தனிமையை உணர்ந்த அவர், தன்னுடைய இரண்டு மகன்களின் ஒப்புதலுடன் மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.
அதன் மூலம் புதுக்கோட்டையை சேர்ந்த தனசேகரன், 57, புதுக்கோட்டைக்கு சென்று அவருடன் கடந்த ஒரு ஆண்டாக சேர்ந்து வாழ்ந்தார். அப்போது தனசேகரன் ஏற்கனவே தன் முன்னாள் மனைவி மற்றும் பல பெண்களை ஏமாற்றியது அப்போது தெரிய வந்த்துள்ளது.
அதனைத் தொடர்ந்து விரக்தி அடைந்த அப்பெண் அவரை பிரிந்து புதுச்சேரிக்கு திரும்பிய நிலையில், ஆத்திரமடைந்த தனசேகரன், அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த போது எடுத்த அந்தரங்க படங்களை அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் மகன்களுக்கு அனுப்பி மிரட்டிவுள்ளார்.
இந்நிலையில் அது தொடர்பாக அப்பெண்ணின் உறவினர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் தனிப்படையினர் புதுக்கோட்டை சென்று தனசேகரனை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.





















