திருவள்ளூர், பிப். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, திருவள்ளூர் சி.வி.என் சாலையில்  மாவட்ட பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பை அளித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டந்தோறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் பிரச்சார யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று காலை 12 மணியளவில் 190 வது தொகுதிக்கான பிரச்சார யாத்திரையை மேற்கொண்ட அவர் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் 191-வது தொகுதியாக திருவள்ளூருக்கு வருகை தந்தார்.

இந்நிலையில் அவருக்கு நகரின் எல்லைப்பகுதியான சிவிஎன் சாலையில் அக்கட்சியினர் உற்சாகத்துடன் பிரமாண்டமான வரவேற்பே  அளித்தனர்.  அதனைத் தொடர்ந்து அண்ணாமலை காமராஜர் சிலை வழியாக,ஜே.என்.சாலை, ராஜாஜி சாலை, தேரடி சாலை, பஜார் வீதி என நகரின் முக்கிய வீதிகளின் வழியாக யாத்திரையை மேற் கொண்டார்.

அப்போது சாலையின் இருபுறமும் நின்றுக் கொண்டிருந்த அக்கட்சித் தொண்டர்கள் அண்ணாமலைக்கு சாலையின் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  யாத்திரைக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கும் போது, கடந்த 67 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மருத்துவ படிப்புக்கான இடம் 57 ஆயிரத்திருத்தில் இருந்து, 1 லட்சத்து 8 ஆயிரமாக  உயர்ந்திருப்பதாக தெரிவித்தார்.

திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., தூங்கி கொண்டிருக்கிறார் எனவும் மேலும் அவர் இன்னும் 1980 கால கட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்‌ எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

அதானி ராமர் கோயிலைத் திறந்தார் என்று திருவள்ளூர் எம்பி பேசியிருப்பது  2 வயது குழந்தைக்கு இருக்கும் அறிவு திருவள்ளூர் எம்பிக்கு இல்லை என்பதை காட்டுகிறது என்றும் 4 ஆண்டுகள் கழித்து தொகுதி பக்கம் சென்றுள்ள திருவள்ளூர் நாடாளுமன்ற எம்.பி. ஜெயக்குமாரால் தொகுதி மக்களுக்கு இதுவரை எந்த பயனும் இல்லை எனவும், மேலும்,  காங்கிரஸ் கட்சியில்  இருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் சீட்டு கேட்டு நிற்க வேண்டும் என்பதே தவிர்த்து அவர்களுக்கு வேறொன்றும் கிடையாது. அதற்கு திருவள்ளூர் எம்பி விதிவிலக்கல்ல.என்றார்.

மேலும் இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக மோடி ஆட்சியில் அமருவார் எனவும் மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டு மதலீட்டார்கள் பயணங்கள் குறித்தும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அப்போது வைத்தார்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்க வேண்டிய கேள்வி மற்றும் பேச வேண்டிய விசயத்தையும் துண்டு சீட்டைப் பார்த்து பார்த்து படிப்பதாக அப்போது கிண்டலடிக்கும் விதத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து மார்ச் 2022 -ல் துபாய் போனார். 6100 கோடிக்கு தொழில் முதலீட்டாளர்களுடன் கையெழுத்து போட்டதாக கூறிய நிலையில், 2 ஆண்டுகள் கடந்த நிலையில் 6 ரூபாய் கூட முதல்வர் பெற்று தரவில்லை என்று குற்றம் சாட்டினர் . மேலும் செய்தியாளர்கள் கேட்ட மற்றொறு கேள்விக்கு அதிமுக கதவை மூடினால் என்ன அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. க்கள் கதவை உடைத்து கொண்டு பாஜகவில் வந்து சேர்வதை சமீபத்தில் பார்த்திருப்பீர்கள் என்றார். தொடர்ந்து தமிழகத்தின் வரலாற்றில் 15 முன்னாள் எம்எல்ஏக்கள், ஒரு முன்னாள் எம்பி வந்துள்ளனர்; பாஜகவின் பக்கம் நல்லவர்கள் வருகின்றனர் என்றார்.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதாலப்  பாதாளத்தில்  உள்ளது எனவும், சமூக நீதி பாதுகாப்பு படுதோல்வி அடைந்துள்ளது என தெரிவித்த அவர், டிஆர் பாலு எம்பி பேசியது  குறித்து கேட்டதற்கு, திமுக சாதி அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

பேட்டி தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here