திருத்தணி, பிப். 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …

திராவிட அரசியலில்  கலந்துள்ள  ஜாதி மற்றும் குடும்ப அரசியல்,  மேலும் ஊழல், அடாவடித்தனம் ஆகிய 4 அழுக்குகள் அகற்றப்பட வேண்டு என  .  திருத்தணியில் நடைபெற்ற எண் மண், எண் மக்கள் யாத்திரை கூட்டத்தில் பா.ஜ.க  மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எண் மண், எண் மக்கள் யாத்திரையின் 190 வது கூட்டத்தை இத்தொகுதியில் நடத்தினார்.

முன்னதாக இத்தொகுதிக்கு வருகைத் தந்த அண்ணாமலைக்கு அக் கட்சியினர், மிகுந்த உற்சாகத்துடன் அரக்கோணம் சாலை, மா.பொ.சி சாலைப் பகுதிகளில்  பேனர்கள், கொடி கம்பங்கள், வாழை தோரணங்கள்  கரகாட்டம்,  மயிலாட்டம், ஒயிலாட்டம் பொய்கால் குதியை, கேரள சண்டி மேளம், பம்பை உடுக்கை மேள தாளங்கள் உட்பட பல்வேறு வேடங்களில் கலைஞர்கள்  பிரமாண்ட வரவேற்பினை வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும்  மலையடி வாரத்திலிருந்து பாதயாத்திரையை தொடங்கிய அண்ணாமலைக்கு பா.ஜ.க வினர்  முருகன் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட  வெள்ளி வேலினை வழங்கினார்கள்.

மேலும் அப் பாதயாத்திரையின் போது சாலையின் இருபுறமும் திரண்டுஇருந்த பொதுமக்கள்  அண்ணாமலைக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு வழங்கினார்கள்.

பின்னர் பிரச்சார வாகனத்தில் ஏறி அவர் சிறப்புரை நிகழ்த்தும் போது ராமநாதபுரத்தில்  தொடங்கப்பட்ட எண் மண் எண் மக்கள் யாத்திரை  மக்கள் யாத்திரையாக மாறிவுள்ளதாகவும், மேலும் அதனால் பா.ஜ.க விற்கு மக்களிடையே செல்வாக்கு வெகுவாக அதிகரித்து வருவதாகவும் அப்போது தெரிவித்தார்.

மேலும் எதிர் வரும் நடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி  மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி உறுதியாக பிரதமர் ஆவாரெனவும், அப்போது அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில்  திராவிட கட்சிகள் ஜாதி அரசியல், குடும்ப அரசியல்,  ஊழல், அடாவடி அரசியல் செய்து மக்களை ஏமாற்றி வருகிறது எனவும் மேலும் அந்த 4 அழுக்குகளை அகற்ற  மக்கள்  முன் வரவேண்டும் என அப்போது கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் உரைநிகழ்த்தும் போது அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜெகத்ரட்சகன்  திமுக வை பொறுத்தவரை  முழுக்குடம் எனவும் ஆனால் அவர் மக்களுக்கு குறைக் குடம் என்ற அவர் மேலும் திமுக வின் ரிசர்வ் வங்கியாக ஜெகத்ரட்சகன் இருக்கிறார் எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றாவாறு குற்றம் சாட்டினார். மொத்தத்தில் வெகு பிரமாண்டமாக நடைப்பெற்ற அக்கூட்டத்தில் மிகுந்த ஆவேசமான சொற்களையும் மக்களை உற்சாகப் படுத்தும் வகையில் உள்ளூர் பிரச்சனைகள் குறித்த அரசியலையும், மேலும் எதிர்கட்சிகளை சார்ந்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறைப்பாடுகள் குறித்தே உரை நிகழ்த்திய அவர் பாஜகவின் பத்தாண்டு சாதனைக் குறித்து பேசுகையில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்ப்படும் திட்டங்கள் 98 சதவீதம் மத்தியரசின் திட்டங்கள் எனப் பொதுப்படையாக பேசினார் என்றே சொல்லலாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here