சோழவரம், சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஓரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 82 செண்ட் புறம்போக்கு நிலத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதுக் குறித்து அப்பகுதி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினரிடமும் புகார் மனு வாயிலாகவும், வாய் மொழி வாயிலாகவும் தெரிவித்தும் பலமுறை புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந் நிலையில், தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தினை அவரிடம் இருந்து மீட்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், பள்ளி, பூங்கா உள்ளிட்ட அப்பகுதிகு மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பயன் படுத்திட நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும் என்பதனை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் ஷகிலா மகேந்திரன், மற்றும் வார்டு உறுப்பினர் நீலா சுரேஷ், உள்ளிட்டவர்களின் தலைமையில் அக் கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டப் பெண்கள் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவினை அவர்கள் வழங்கினார்கள்.






















