எண்கண், சனவரி. 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் …

வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன் துவங்கி தைபூச விழா நடைப்பெற்று வருகிறது.

அவ்விழாவின் முக்கிய நிகழ்வான 9 ஆம் நாளான இன்று, அதிகாலை அருள்மிகு சண்முகபெருமானுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம்  செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்று. பின்பு ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள்  முழங்க ஆலயத்தை வலம் வந்து திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து திருத்தேருக்கு வந்தடைந்த சுப்பிரமணிய சுவாமிக்கு தேரில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று நான்கு ரத வீதிகளில் வலம் வர  தயாரானார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர்  திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து தை பூச தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் கதிர்வேலவனக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரோ முழக்கமிட்டப்படியே திருத்தேரின் வடம் பிடித்திழுக்க ராஜ கம்பீரத்துடன் திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here