கும்பகோணம், ஜன. 01

தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் இன்று  மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 106 பயனாளிக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன் பயனாளிகளுக்கு உப கரணங்களை வழங்கினார்.

திருவிடைமருதூர் சட்டமன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் முட்டுக்காடு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

அதில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், கலந்து கொண்டு 106 பயனாளிக்கு ரூ 6.50 மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டி,சக்கர நாற்காலி, ஊன்றுகோல், சிறப்பு நாற்காலி, செயற்கை கால்கள், காதொலிக் கருவிகள், ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார்.

மேலும் அந்நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, துணை பெருந்தலைவர் பத்மாவதி கிருஷ்ணராஜ், திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் குகூர் அம்பிகாபதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஜிகேஎம் ராஜா, சரவணன்,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு, பேரூராட்சி செயலாளர் சுந்தர் ஜெயபால், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here