கும்பகோணம், டிச. 18 –

வானிலை ஆய்வு மையம் தஞ்சாவூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 16 மற்றும் 17 தேதிகளில் மழைப் பெய்ய வாய்ப்புயிருப்பதாக தெரிவித்த அறிவிப்பின் படி, இந்நிலையில் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொலிவு இருந்தது.

அதுப்போன்று கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழபுரம் காவல் நிலையம் அருகே தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையின் காரணமாக தாயினை பிரிந்திருந்த மூன்று நாய் குட்டிகள் மழையில் நனைந்த படி வெகு நேரமாக குளிரில் நடுங்கி கொண்டிருந்த நிலையில் அதனைக் கண்ட அக்காவல் நிலைய தலைமை காவலர் ஸ்ரீதர் மழையில் நனைந்தபடி, அக்குட்டிகளை எடுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் வைத்து அவைகளை பாதுகாத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகியதை தொடர்ந்து, பல்வேறு பகுதியில் இருந்து அவரின் மனிதாபிமான செயலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here