மீஞ்சூர், டிச. 16 –
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த பெரும் புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அப்புயல் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் அப்புயல் வெள்ளத்தில் பாதிப்பு அடைந்தனர். அதனைக் கருத்தில் கொண்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறிவுறுத்தலின் படியும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆணைகினங்கவும், அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்புகள் வழங்கிட அக் கட்சியினருக்கு அறிவுறுத்தப் பட்ட நிலையில், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கா.சு. ஜெகதீசன் முன்னிலையில் கொள்ளூர் கிளை கழக செயலாளர் டிஜெஜி.தினேஷ் ஏற்பாட்டில் ஏலியம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளூர் ,திருப்பேடு ,கனகம்பாக்கம் உள்ளிட்ட கிராமம் முழுவதும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு வெள்ள நிவாரணத்தொகுப்பினை அக் கட்சியினர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது, ஏலியம்பேடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பழனி, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மு.முரளிதரன், பொன்னேரி தொகுதி திமுக தகவல் தொழிற்நுட்ப ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், உள்ளிட்ட திரளான திமுகவிட் கட்சித் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.





















