மாதர்பாக்கம், டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள ரோசா நகரத்தில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை – சென்னை பேராயம் சார்பாக ரோசா நகரம், அமரம்பேடு, சாணாபுதூர் , ஈகுவார்பாளையம் குருசேகரங்கள் இணைந்து நடத்தும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அருட்பணி ஆர்.தினகர்ராஜ் ஆயர் தலைமை வகித்தார் செயலாளர்கள் செல்வராஜ், சம்பத்குமார், லீலா குமார் ஆகியோரும், பொருளாளர்கள் அருண்குமார், தேவசெயல், ராஜேஷ்குமார் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
குருசேகரத்தலைவர் அருட்பணி பி.தேவபிரசாத் ஆயர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று திருச்சபை ஊழியர்களுக்கு பரிசு பொருட்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கும், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நலிவடைந்த மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே எம் எஸ் சிவக்குமார், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மோகன் பாபு, மாதர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மற்றும் திருச்சபை ஊழியர்கள், மூப்பர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



















