அத்திப்பட்டு, டிச. 12 –
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில், நேற்று மக்கள் நீதிமையம் சார்பில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் பாதிக்கப்பட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்ற மருத்துவ சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து அதில் பங்கேற்ற மருத்துவ பயனாளிகள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் மருத்துவ முகாமும், அதில் பங்கேற்ற 1500 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகளுக்குக் மதிய உணவு பரிமாறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இம் மருத்துவ முகாமில் சென்னை கியூஎம் மருத்துவமனை மற்றும் பிளமிங்கோ மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, உடல் வெப்ப அளவீடு, இதயத் துடிப்பு கண்டறிதல், சுவாச அளவீடு உள்ளிட்ட சிகிச்சை முறைகளும் சிகிச்சைக்கு பின்பு பயனாளிகளுக்கு தேவையான தரமுள்ள மருந்து மற்றும் மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
மேலும் இம் மருத்துவ முகாமில் மருத்துவமனை மேலாளர் டாக்டர் கே.ராமகிருஷ்ணன், டாக்டர் பிரணாப் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையான மருத்துவ குழுவினர் வெள்ளப்பாதிப்புக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட செயலாளர் மீஞ்சூர் தேசிங்கு ராஜன் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் முகநூல் குமார், ஷண்முகப்பிரியன், ஜெயகாந்தன், பத்மநாபன், வெங்கடேசன், சோனு உள்ளிட்டோர் இப்பணிகளில் ஈடுப்பட்டனர்.