திருவாரூர், டிச. 08 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கூத்தாநல்லூரை சார்ந்த சர்புதீன் மஸ்தான் பள்ளிவாசல் தெருவில் இரண்டு கடைகள் கட்டி முடிவடைந்த நிலையில், அக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான நிறைவு சான்றிதழ் வேண்டி மன்னார்குடி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார். அதனை ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் தனபால் நிறைவு சான்றிதழ் வழங்க இரண்டு கடைகளுக்கு 6 ஆயிரம் லஞ்சம் கேட்டு அவரை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதனால் மன உளைச்சல் அடைந்த சர்புதீன் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையிடம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் சர்புதீனிடம் 6 ஆயிரம் ரூபாயில் ரசாயன தடவிய பணத்தை வருவாய் ஆய்வாளர் தனபாலிடம் கொடுத்த போது மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சர்புதீனிடம் லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
மேலும் அவரிடம் இருந்து 6 ஆயிரம் ரொக்கம் பணத்தை பெற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் தனபால் என்பவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கூத்தாநல்லூர் அருகே அத்திக்கடையை சேர்ந்த அமீர் அலி என்பவரிடம் வீட்டிற்கு மின் இணைப்பு மீட்டர் பாக்ஸ் பொருத்துவதற்கு மின்வாரிய ஊழியர் (ஹேங்மேன் ) ஆனந்த் என்பவர் கூத்தாநல்லூர், அத்திக்கடை பகுதிகளில் உள்ள வீடுகளில் 2 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஹேங் மேன் ஆனந்த் என்பவரை கைது செய்தனர்.
கூத்தாநல்லூர் பகுதிகளில் மின் இணைப்பு மீட்டர் பாக்ஸ் பொருத்துவதற்கு , மன்னார்குடி பகுதியில் கட்டிட பணி நிறைவு சான்றிதழ் வழங்குவதற்கும் லஞ்சம் வாங்கிய இரண்டு அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
1 . தனபால் வருவாய் ஆய்வாளர் மன்னார்குடி
- ஆனந்த் மின்சார வாரிய ஊழியர் கூத்தாநல்லூர்





















