திருவாரூர், டிச. 07 –

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைப்பெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாணக்கர்களிடம் உரை நிகழ்த்தும் போது, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இந்திய அளவில் 21 விழுக்காடாக. உள்ளது எனவும், அதுப் போன்று தமிழ்நாடு அளவில் 50 விழுக்காடாக உள்ளது எனவும் அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கும் போது இவ்விழுக்காடு என்பது போதாதெனவும் இனி எதிர் வருங்காலங்களில், அது 100 விழுக்காடாக உயர வேண்டும் எனவும் மாணாக்கர்களுக்கு அப்போது அறிவுறுத்தினார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கலந்து கொண்டு கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 292 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். 2023 2024ஆம் கல்வியாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 91 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10 ஆயிரத்து 712 மாணவ மாணவிகளுக்கு 5 கோடியே 16 லட்சத்து 58 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முதற்கட்டமாக கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த 110 மாணவர்கள் மற்றும் 182 மாணவிகள் என மொத்தம் 292 மாணவ மாணவிகளுக்கு 14, 05,320 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாணவர்கள் மத்தியில் மாணாக்கர்களை உற்சாகப் படுத்தும் விதத்தில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பள்ளி படிப்பு முடித்து கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்களின் விழுக்காடு இந்திய அளவில் 21 சதவீதம் எனவும், அதேச் சமயத்தில் தமிழ்நாட்டில் அதன் விழுக்காட்டின் அளவு 50 சதவீதமாக உள்ளதாகவும் அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர், அதாவது 100 மாணவர்கள் பள்ளி பயின்றால் அதில் 50 மாணவர்கள் மட்டுமே கல்லூரி படிப்பு படிக்கின்றனர். தேசிய அளவில் ஒப்பிடும்போது நாம் அதிகமாக இருந்தாலும் இது பத்தாது எனவும், மேலும் அது எதிர் வரும் காலங்களில் பள்ளி படிக்கும் மாணவர்கள் 100% கல்லூரி படிப்பு படிக்க வேண்டும் என மாணவர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என மாணவ மாணவிகள் மத்தியில் உற்சாக உரையாற்றினார்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் உமாபிரியா பாலச்சந்தர்,  கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here