திருவாரூர், டிச. 07 –

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜம் புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கும் மேலாக அதி வேக காற்றுடன் கூடிய தொடர் கன மழை பெய்தது. அதனால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி பொதுமக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் தொடர்ந்து வெள்ள நிவாரண உதவிகள் வழங்கி வரப்படுகிறது. இருப்பினும், புயல் மழைக்காரணமாக சென்னை முழுவதும் மழை நீரில் தத்தளித்து வரும் நிலையில், அதில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் திண்டாடி வரும் சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவும் நோக்கில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வெள்ள நிவாரண பொருட்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

அதில் முக்கியத் தேவைகளான தண்ணீர் பாட்டில்கள், போர்வை, பாய், புடவை, பிஸ்கட், ரொட்டி, சானிட்டரி நாப்கின், அரிசி, பருப்பு, கோதுமை, ஆயில் உள்ளிட்ட ரு. 20 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளை லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுள்ளது. தொடர்ந்து வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் கொடியசைத்து சென்னைக்கு வழியனுப்பி வைக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here